”சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்” – கோவையில் தமிழிசை செளந்தராஜன் பேட்டி!

புதுச்சேரியில் 7 மணிக்கு லியோ படத்தின் காட்சிக்கு ஆட்சியர் அனுமதி கொடுத்தும், பல்வேறு அழுத்தம் காரணமாக படம் போடவில்லை, விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் அதேபோல் சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என புதுச்சேரி துணை…

புதுச்சேரியில் 7 மணிக்கு லியோ படத்தின் காட்சிக்கு ஆட்சியர் அனுமதி
கொடுத்தும், பல்வேறு அழுத்தம் காரணமாக படம் போடவில்லை, விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் அதேபோல் சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் தெரிவித்தார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

நாடு முழுவதும் நீட் தேர்வை மாணவர்கள் எழுதி கொண்டிருக்கும்
சூழலில், தலையெழுத்தை மாற்றி விடுவோம் என்று கூறி, நீட் தேர்வுக்கு எதிராக
கையெழுத்து இயக்கம் துவங்க இருப்பதாக சொல்கிறார்கள்.  ஆட்சிக்கு வந்தததும் முதல் கையெழுத்து நீட்டுக்கு எதிராக என்று சொன்னார்கள் ஆனால் எதுவும் செய்யவில்லை.

தற்போது 10 நாட்களாக லியோ..லியோ..என்று இன்னொரு பிரச்னை
ஓடிக்கொண்டிருக்கிறது.  புதுச்சேரியில் 7 மணிக்கு லியோ படத்தின் காட்சிக்கு ஆட்சியர் அனுமதி கொடுத்தார்.  ஆனால் பல்வேறு அழுத்தம் காரணமாக படம் போடவில்லை. பக்கத்து மாநிலங்களில் படத்திற்க்கு அனுமதி கொடுத்தால் கூட பல்வேறு மறைமுக அழுத்தம் காரணமாக அவர்களால் படத்தை போடமுடியவில்லை.

விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்று சொல்கிறார்கள்.
அதே போல் சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்.  சினிமாத்துறையில்
சுதந்திரமான, ஆரோக்கியமான ஒரு சூழல் இருக்க வேண்டும்.

மேலும் ஜெய்ஸ்ரீராம் சொல்வதில் எந்த தவறுமில்லை.  வெற்றியின் வெளிப்பாட்டால் தான் அவர்கள் ஜெய்ஸ்ரீராம் சொன்னார்கள்.  மற்ற மதத்தினரும் அவர்களின் மதத்தின் வெளிப்பாட்டோடு சொல்வதில் தவறில்லை.

காமராஜரை நான் காங்கிரஸோடு சேர்க்கவில்லை.  நான் காமராஜரின் எண்ணங்களை ஏற்றுகொள்கிறேன்.  காமராஜருக்கு என்ன மரியாதை காங்கிரஸார் கொடுத்துள்ளார்கள். என்ன மரியாதையும் கொடுத்து கொண்டிருக்கிறார்கள் என்றும் நமக்கு தெரியும்.

தெலங்கானவிலும், புதுச்சேரியிலும் நான் முதல் சிட்டிசன். அதனால் அங்கு அரசியல் பேசமாட்டேன்.  ஆனால் தமிழ்நாட்டில் நான் பொதுவான சிட்டிசன். அதனால் இங்கு எனது கருத்தை முழுமையாக பதிவு செய்வேன்.

இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.