முக்கியச் செய்திகள் இந்தியா

மே-3ம் தேதி வரை கடைகளைத் திறக்க தடை : புதுச்சேரி அரசு

புதுச்சேரி மாநிலத்தில் வரும் 30 ஆம் தேதி வரை அத்தியாவசிய கடைகளை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மே-3 ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் அங்கு வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே மளிகை கடை, பாலகம், உணவகங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர பிற கடைகள் அனைத்தையும் வரும் 30ஆம் தேதி வரை திறக்க அரசு தடை விதித்து இருந்தது.

இந்நிலையில் புதுச்சேரி அரசு செயலர் அஷோக் குமார் புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளார் அதில் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மீதமுள்ள கடைகளை வரும் மே 3 ஆம் தேதி வரை திறக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள மதுபான கடைகளையும் மே 3 ஆம் தேதி வரை மூட வேண்டும் என கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் வரும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் கண்டிப்பாக RTPCR பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் அறைக்குள் நுழையும் முன் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட்டை காண்பிக்க வேண்டும் என்றும் தெரிவிகப்பட்டுள்ளது. இதேபோல் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வெற்றி பெற்ற சான்றிதழ் பெற இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அரசு இல்லத்திலிருந்து மாற விருப்பமில்லை:எடப்பாடி பழனிசாமி!

கொரோனாவால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கு ரூ.10 லட்சம்: முதல்வர்!

இந்தியாவில் 78% பள்ளிகளில் இணையவசதி இல்லை – ஆய்வில் தகவல்

Saravana Kumar