“உங்களில் ஒருவன்” புத்தகத்தின், முதல் பாகம் வெளியீட்டு விழாவிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கும் உங்களில் ஒருவன் நூலின் முதல் பாகத்தை இம்மாத இறுதியில் வெளியிடவுள்ளதாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில், 1976-ஆம் ஆண்டு வரையில் தன்னுடைய 23 ஆண்டுகால வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை அதில் பதிவு செய்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், வரும் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் சோனியா காந்திக்கு பதில் ராகுல் காந்தி கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்குமுன் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணைய 38 கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி, ஃபரூக் அப்துல்லா, தேசிய வாத காங் சரத்பவார், தெலங்கானா ராஷ்டிர சமிதி சந்திரசேகர ராவ் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு முன்னோட்டமாக “உங்களில் ஒருவன்” நூல் வெளியீட்டு விழா அமைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








