பொங்கல் பரிசு வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பொங்கல் பரிசு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.    தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில்,  ஆண்டுதோறும் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற…

பொங்கல் பரிசு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

 

தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில்,  ஆண்டுதோறும் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.  

  • கரும்பு கொள்முதல் செய்ய மாவட்டம் மற்றும் வட்டாரம் வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. 
  • மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண்துறை இணை இயக்குனர், கூட்டுறவு துறை இணை பதிவாளர்,  நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரை இந்த குழு கொண்டுள்ளது. 
  • சென்னையில் மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் உதவி ஆணையர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 
  • வட்டார அளவில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநர் மற்றும் வேளாண்மை அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 
  • சென்னையில் உதவி ஆணையர் மற்றும் வேளாண்மை அலுவலர் கொண்ட குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. 
  • கரும்பை வேளாண்மை உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவிசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யபட வேண்டும்.
  • பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட வேண்டும்.
  • இது தொடர்பாக 1967, 1800 425 5901 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
  • பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தினசரி கண்காணிக்க தொடர்பு அலுவலர்களை நியமிக்கபட வேண்டும்.

இவ்வாறு அராணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.