தமிழகத்தில் பொதுமக்கள் அவரவர் நலன் கருதி முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மூதறிஞர் இராஜாஜியின் 50 வது ஆண்டு நினைவு சிறப்பு புகைப்படக் கண்காட்சி
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் மா.சுப்ரமணியன், தா.மோ அன்பரசன் , சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சீனா , ஜப்பான் , தென்கொரியா , தைவான் போன்ற 10-க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.
மேலும், இது தொடர்பாக முதல்வர் அனைத்து துறை அலுவலர்களுடன் கூட்டத்தையும் நடத்தி தமிழகத்தில் ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளிட்டவை குறித்து அலசிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களுக்கு சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100% ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் சென்னை, கோவை , மதுரை, திருச்சி உள்ளிட்ட பன்னாட்டு விமான
நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் (RANDOM)
கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகள் எதுவும் விளக்கிக் கொள்ளப்படவில்லை எனவே மக்கள் அவரவர் நலன் கருதி முகவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அத்துடன், கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் நாள்தோறும் 4000 முதல் 5000 ஆர்.டி.பி.சியார்
(RTPCR) பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பத்திற்கும் குறைவாக ஒற்றை இலக்க எண்களில் தான் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் முதல் தவணையில் 96 சதவீதமும் இரண்டாம் தவணையில் 92 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இதனால் தமிழகத்தில் 90 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறது என கூறினார்.
மேலும், இதன் காரணமாக கடந்த ஆறு மாத காலமாக தமிழகத்தில் கொரோனாவால் இறப்பு நிகழவில்லை. இந்த நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும்
பொதுமக்கள் முகக்வசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.