முக்கியச் செய்திகள் தமிழகம்

உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக இருப்பதை தான் பெருமையாக கருதுகின்றேன் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கலைஞரின் பேரன், முதல்வரின் மகன், அமைச்சர் என இருந்தாலும் உங்கள் வீட்டு
செல்லப் பிள்ளையாக இருப்பது தான் விருப்பம்  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விழாவில் பேசிய  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்காத 10 எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றேன் என தெரிவித்தார்.

அமைச்சராக பொறுப்பேற்ற பின் 3 நாள் சுற்று பயணம் மேற்கொண்டு வருகின்றேன். கோவையில் நடத்தப்படும் இந்த விழா 4 நாட்களில் திட்டமிட்ட விழா. இது போன்ற விழாவை அமைச்சர் செந்தில்பாலாஜியால் மட்டுமே முடியும். மாநாடு போல இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கின்றது. குறுகிய காலத்தில் மாநாடு போல இந்த நிகழ்வை நடத்தும் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி என தெரிவித்தார்.

அரசு நிர்வாகம் கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளாக செயல் இழந்து இருந்தது. தற்போது அதற்குத் சேர்ந்து செயல்படும் அமைச்சராக செந்தில்பாலாஜி இருக்கின்றார் என தெரிவித்த. கோவை மக்கள் தங்கள் ஊரில் அமைச்சர் இல்லை என்று நினைத்து இருப்பார்கள். இப்போது கோவை செந்தில் பாலாஜி என மக்கள் ஏற்றுக்கொண்டனர் என தெரிவித்தார்.


இதுவரை கோவை மாவட்டத்தில் 1.57 லட்சம் மனுக்களை பெற்று அதை தீர்வு கண்டு
இருக்கின்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி எனவும் கடந்த 2021 ல் துவங்கப்பட்ட
மின்னகம் மூலம் வரும் மனுக்களிலும் 100 சதவீதம் வரை தீர்வு கண்டு
இருக்கின்றார் என தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 2.20 லட்சம் மட்டுமே விவசாயிகளுக்கு இலவச
இணைப்பு கொடுக்கப்பட்டது.ஆனால் திமுக ஆட்சியில் ஒன்றரை வருடத்தில் 1.50
இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கட்சி, அமைச்சர் என இரண்டையும் சிறப்பாக செய்து வருகின்றார் செந்தில்பாலாஜி. கோவை மாவட்டத்தில் 10 தொகுதியில் ஒரு திமுக எம்.எல்.ஏ கூட இல்லை. கோவையை புறக்கணிக்கின்றனர். என்ற வாதத்தை தனது செயல்படுகளால் செந்தில் பாலாஜி தகர்த்து இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் அதிக நலத்திட்டங்கள் பெற்ற மாவட்டம் கோவை மாவட்டம் என தெரிவித்த
அவர், எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி எனவும்
தெரிவித்தார். எதிர்கட்சியாக இருந்தாலும், பா.ஜ.கவாக இருந்தாலும், வாட்ஸ் அப்பில் பொய் செய்தி பரப்புவராக இருந்தாலும் அவர்களும் சேர்த்துதான் இந்த அரசு என தெரிவித்த அவர், கோவை மாவட்டத்திற்கு மட்டும் இவ்வளவு நலத்திட்டம் என்றால் மாநிலம் முழுவதும். எவ்வளவு நலத்திட்ங்களை இந்த அரசு செய்து இருக்கும் எனவும்
தெரிவித்தார்.

அதிமுக எம்.எல்.ஏகள் இந்த நிகழ்வில் பங்கேற்க வில்லை, அவர்கள் காதுகளில் இந்த
திட்டங்கள் சென்றைய வேண்டும். சென்னைக்கு அடுத்த இடம் கோவை என்றார்கள். சென்னைக்கு சமமாக கூட இல்லை. சென்னையை விட உயர்வாக கோவையை செந்தில் பாலாஜி உயர்த்துவார்.  கலைஞரின் பேரன், முதல்வரின் மகன், அமைச்சர் என எத்தனை பெருமைகள் இருந்தாலும் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக இருப்பதை தான் பெருமையாக கருதுகின்றேன். பொறுப்பான செல்ல பிள்ளையாக இருப்பேன் என்பதை உறுதியளிக்கின்றேன் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டி-20 உலகக் கோப்பை: 2-வது அரையிறுதியில் பாக். ஆஸி. இன்று மோதல்

Halley Karthik

உதகை அருகே உள்ள காவிலோரை கிராமத்தில் புலி நடமாட்டம்

Arivazhagan Chinnasamy

பல்லி விழுந்த உணவை உண்ட பள்ளி குழந்தைகள்; மருத்துவமனையில் அனுமதி

G SaravanaKumar