முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்- சீனா

இந்தியா மற்றும் சீனாவின் உறவுகள் வலுப்பட இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் என சீன வெளியுறவு அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே எல்லை விவகாரம் இரண்டாண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், 2020ம் ஆண்டு ஜூன் மாதம் சீன ராணுவம் தனது படைகளை குவித்து ஆக்கிரமிப்பு மற்றும் அராஜக வேலைகளில் ஈடுபட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை தொடர்ந்து இந்திய தரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன. இரு நாட்டு படைகளுக்கு இடையேயான மோதலில் இந்திய வீரர்கள் 40 பேர் வரை உயிரிழந்தனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. பின்னர் இந்தியா மற்றும் சீனாவின் ராணுவ தளபதிகள் மட்டத்திலான பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பின் படைகள் வாபஸ் பெறப்பட்டன.

அருணாச்சல பிரதேச எல்லையில் கடந்த 9ம் தேதி சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைய முயன்றனர். அப்போது இந்திய வீரர்கள் அவர்களை விரட்டி அடித்தனர். இதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இந்திய ராணுவ வீரர்களின் தொடர் தாக்குதலின் காரணமாக சீன ராணுவம் பின்வாங்கியது. எனினும், இந்திய எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றமான நிலை காணப்படுகிறது.இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, தனது வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் தூதரக அளவில் மற்றும் ராணுவ அடிப்படையிலான வழிகளில் தொடர்புகளை மேம்படுத்தி வருகின்றன. இரு நாடுகளும் எல்லை பகுதிகளில் ஸ்திர தன்மை நிலவுவதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் உறவுகள் நிலையான மற்றும் வலிமையான அளவில் வளர்ச்சி காணும் திசையை நோக்கி முன்னேற இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

உலகின் 2வது பெரிய பொருளாதார நாடான சீன தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனை அந்நாட்டு அரசு எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உலக கோடிஸ்வரர் பட்டியலில் இடம்பெற்ற 18 வயது இளைஞர்!

குளிர்பானம் குடித்ததால் சிறுமி உயிரிழந்தாரா? போலீசில் புகார்

Gayathri Venkatesan

அடுத்த ஆண்டில் ஜியோ 5ஜி சேவை; முகேஷ் அம்பானி தகவல்!

Jayapriya