’பா.ஜ.க-வின் போக்கைப் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜெகன்மோகன், நவீன் பட்நாயக் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என எம்.பி. தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா செல்லும் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்…

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜெகன்மோகன், நவீன் பட்நாயக் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என எம்.பி. தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா செல்லும் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், வட அமெரிக்கா தமிழ்ச் சங்கம் சார்பில் விழா ஒன்றில் கலந்து கொள் செல்கிறேன் எனகூறினார். மேலும், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக நிறுத்தியுள்ள உள்ள யஸ்வந்த் சின்காவை வெற்றி பெற வைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எடுத்து உள்ளதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பா.ஜ.க. அடையாள அரசியலை உயர்த்தி பிடித்து உள்ளது எனவும், பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்துகிறோம் என்று பழங்குடி மக்களின் பாதுகாவலர் போல் காட்டிக் கொள்கிறது எனவும் கூறினார்.

மேலும், அரசியல் சூதாட்டத்தை பா.ஜ.க செய்கிறது எனத் தெரிவித்த அவர், நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்து உள்ள நிலையில் கே.ஆர். நாராயணன் போல் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையும் அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் மரியாதையும் கொண்ட ஒருவரைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதற்காகக் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் யஸ்வந்த் சின்காவை நிறுத்தி உள்ளோம். அவரின் வெற்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். அரசியலமைப்பு சட்டத்தை உறுதிப்படுத்தும். அவருக்கு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் வாக்களிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார். மேலும், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தங்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து யஸ்வந்த் சின்காவிற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘தொழில்துறையில் தமிழ்நாட்டில் மாபெரும் மறுமலர்ச்சி- அமைச்சர் தங்கம் தென்னரசு’

தொடர்ந்து பேசிய அவர், சிவசேனாவை உடைத்த அநாகரீக அரசியல் நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தானது எனவும், பா.ஜ.க.வின் போக்கைப் பொதுமக்கள் புரிந்து கொண்டு தனிமைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். பள்ளிகளில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாக வரும் தகவல்கள் வருகின்றன. இதற்காக முதல்வர் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். சிறுமிகளின் பாதுகாப்புக்கு பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து மீட்கத் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி. தொல்.திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.