இன்று சென்னை வருகிறார் திரெளபதி முர்மு!

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் திரௌபதி முர்மு இன்று சென்னை வருகிறார். திரெளபதி முர்மு அனைத்து மாநிலங்களுக்கும் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில் வாகக்கு…

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் திரௌபதி முர்மு இன்று சென்னை வருகிறார்.

திரெளபதி முர்மு அனைத்து மாநிலங்களுக்கும் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில் வாகக்கு சேகரிப்பதற்காக சென்னைக்கு சனிக்கிழமை (இன்று) வரவுள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் மாலை 3 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் சந்திக்கவுள்ளார்.  தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோருகிறார்

இன்று பிற்பகல் சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பாஜக எம்.எல்.ஏ.க்கள், பாமக எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள், ஜி.கே.வாசன் எம்.பி. உள்ளிட்டோரைச் சந்தித்து ஆதரவு கோருகிறார். மேலும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், பூவை ஜெகன்மூர்த்தி, ஜான் பாண்டியன், தேவநாதன் யாதவ் உள்ளிட்டோரையும் மரியாதை நிமித்தமாக திரௌபதி முர்மு சந்திக்கிறார்.

திரௌபதி முர்முவை வரவேற்க பாஜக சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.