இரவில் உலா வரும் சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பூர் ஊதியூர் பகுதியில் சிறுத்தை உலா வரும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஊதியர் பகுதியில் கடந்த 100…

திருப்பூர் ஊதியூர் பகுதியில் சிறுத்தை உலா வரும் காட்சிகள் கண்காணிப்பு
கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஊதியர் பகுதியில் கடந்த 100 நாட்களுக்கு
மேலாக சிறுத்தை அப்பகுதியில் சுற்றி வருவதாக பகுதி விவசாயிகள் மற்றும்
பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதன் காரணமாக மூன்று மாதங்களுக்கு
மேலாக ஊதியூர் மலைக்கோவிலில் மாலை நேரத்தில் செல்வதற்கு வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 5 கூண்டுகள் வைத்து சிறுத்தை பிடிக்கும்
பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஊதியர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் ஜூன் 11ஆம் தேதி இரவு சிறுத்தை அவ்வழியே நடந்து சென்றது
பதிவாகியுள்ளது. கூண்டு வைக்கப்பட்டிருக்கின்ற இடத்திற்கு அருகாமையிலேயே
சிறுத்தை கூண்டுக்குள் செல்லாமல் நடந்து செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இரவு நேரங்களில் தேவையில்லாமல்
யாரும் வெளியே சுற்ற வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து
சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.