சீர்காழியில் ரயில் தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டம்… காரணம் என்ன?

சீர்காழி ரயில் நிறுத்த போராட்ட குழுவினர்கள் அறிவித்திருந்த தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டமானது, ரயில்வே நிர்வாகம் உத்தரவை அடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. மயிலாடுதுறை, சீர்காழி ரயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 40க்கும் மேற்பட்ட ரயில்கள்…

சீர்காழி ரயில் நிறுத்த போராட்ட குழுவினர்கள் அறிவித்திருந்த தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டமானது,
ரயில்வே நிர்வாகம் உத்தரவை அடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

மயிலாடுதுறை, சீர்காழி ரயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 40க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா
பெருந்தொற்று காரணமாக நெடுந்தூரம் செல்லும் ரயில்கள் சீர்காழி ரயில்
நிலையத்தில் நிற்காமல் செல்லும் நிலை உருவானது.

ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் நிறைவடைந்து மூன்று ஆண்டுகளை கடந்த நிலையிலும் இரு வழி மார்க்கமாக நின்று செல்ல வேண்டிய ரயில்கள் ஒரு வழி மார்க்கமாக மட்டுமே தற்பொழுது வரை நின்று செல்கின்றன. இதனால் ரயிலில் பயணிக்கும் எளிய மக்களும், வயதானவர்களும் சிதம்பரம் அல்லது மயிலாடுதுறை ரயில் நிலையங்களில் இறங்கி அங்கிருந்து சீர்காழிக்கு செல்லும் அவல நிலை தொடர்ந்தது.

மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து சீர்காழிக்கு செல்ல  பேருந்து வசதிகள் இல்லாததால் பல மணி நேரம் காத்திருந்து சீர்காழி வந்தடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே 2020 வரை இரு வழி மார்க்கமாக சீர்காழியில் நின்று சென்ற அனைத்து ரயில்களும் வழக்கம் போல் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள், வணிகர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் இடையே ரயில் நிறுத்த போராட்ட குழுவினர் ரயில் தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டத்தை வருகின்ற 17ஆம் தேதி அறிவித்திருந்தனர். இந்நிலையில் ரயில்வே நிர்வாக கோட்ட மேலாளர் ஹரிக்குமார் கொரோனா காலத்தில் தடைபட்ட ஐந்து ரயில்கள் இரு வழி மார்க்கமாக சீர்காழியில் நின்று செல்லும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து நடத்த இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

ஸ்ரீ.மரகதம்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.