மேயர், துணை மேயர், நகராட்சி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மாநகராட்சி மேயர்களுக்கு மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாயும், துணை மேயர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் மாதாந்திர மதிப்பூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதேப்போல நகராட்சி மன்ற தலைவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், துணை தலைவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், நகர் மன்ற தலைவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது
பேரூராட்சி தலைவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், பேரூராட்சி துணைத்தலைவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு இரண்டாயிரத்து 500 ரூபாயும் மதிப்பூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மேயர், துணை மேயர்கள் மற்றும் உள்ளாட்சி பிரநிதிகளின் கோரிக்கைகளை ஏற்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த மாதம் முதலே மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக திறனை வலுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது







