இந்தியர்கள் எங்கு சென்றாலும் “மினி இந்தியா”வை உருவாக்குவோம் – பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

இந்தியர்கள் எங்கு சென்றாலும் மினி இந்தியாவை உருவாக்குவோம் என  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இரு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். பாரிசில் உள்ள  லா சீன் மியூசிகேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு அவர் இந்திய சமூகத்தினர்…

இந்தியர்கள் எங்கு சென்றாலும் மினி இந்தியாவை உருவாக்குவோம் என  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இரு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். பாரிசில் உள்ள  லா சீன் மியூசிகேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு அவர் இந்திய சமூகத்தினர் மத்தியில் உரையாற்றினார். அவர் கூறியதாவது:
“உங்களைச் சந்திப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். நீங்கள் இங்கு வந்ததற்கு நன்றி. சிலர் 10-12 மணி நேர பயணம் செய்து  வந்துள்ளனர். அன்பிற்கு வேறு என்ன சான்று வேண்டும்? எங்கு சென்றாலும் மினி இந்தியாவை உருவாக்குவோம். உங்களால் தான் இந்தியா பிரான்ஸ் இடையே நட்புறவு வலுப்பெறுகிறது. பிரான்ஸ் நாட்டு கால்பந்து வீரர்  எம்பாப்பேவுக்கு இந்தியாவில் அதிக ரசிகர்கள் உண்டு. பிரான்சில் உள்ளவர்களை விட, இந்தியாவில் அதிகம் பேர்  அவரை ( Mbappe) அறிந்திருக்கலாம்.
இங்கு போரில் பங்கேற்ற படைப்பிரிவுகளில் ஒன்றான பஞ்சாப் ரெஜிமென்ட் நாளை தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நழுவ விடமாட்டோம், ஒரு கணமும் வீணாக விடமாட்டோம் என்று இந்தியா தீர்மானித்துள்ளது. எனது ஒவ்வொரு நொடியும் நாட்டு மக்களுக்கானது என்று தீர்மானித்துள்ளேன்.
காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, உலகளாவிய விநியோக மாற்றத்தை ஒழுங்குபடுத்துவது, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது – இவற்றில் இந்தியாவின் அனுபவம் உலகிற்கு உதவியாக உள்ளது.  இந்தியாவும் பிரான்சும் நீண்ட காலமாக தொல்பொருள் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன என்பது மிகச் சிலருக்கே தெரியும். இது சண்டிகரில் இருந்து லடாக் வரை விரிவடைந்தது” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து எலிசி அரண்மனைக்கு மோடி சென்றார். அவரை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்றார். பின்னர் பிரதமர் மோடிக்கு அவர் விருந்தளித்தார். இதனைத்தொடர்ந்து அதிபர் இம்மானுவேல் பிரதமர்மோடிக்கு கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் என்ற விருதை வழங்கினார். இது மிக உயர்ந்த பிரான்ஸ் அரசின் கவுரவமாகும். இதனைப் பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.