சேலத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் – தவெக தலைவர் விஜய்க்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சேலத்தில் வருகிற 13-ம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு அனுமதி கேட்டு கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த வாரம் மனு கொடுத்தனர். மனுவில் மகுடஞ்சாவடி, சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் அனுமதி கேட்டு இருந்தனர்.

இந்நிலையில் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாளமுத்து நடராசர் மைதானத்தில் பிப்.13ம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் 13ம் தேதி பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.