விசாரணை குறித்து பொதுமக்களிடம் கருத்து – குவியும் மனுக்கள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் விசாரணை நடைத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவிடம் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவித்திருந்ததை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.  …

சிதம்பரம் நடராஜர் கோயிலில் விசாரணை நடைத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவிடம் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவித்திருந்ததை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

 

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோவில் வரவு-செலவு கணக்குகளை காட்ட வேண்டும் என்றும், 2 நாட்கள் ஆய்வு செய்வோம் என்றும் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் நோட்டீஸ் வழங்கினர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 7 மற்றும் 8-ம் தேதிகளில் ஆய்வு செய்ய வந்த சிறப்பு அதிகாரி சுகுமாறன் தலைமையிலான குழுவுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்கவில்லை. மேலும் வரவு- செலவு கணக்குகளையும் காண்பிக்கவில்லை.

 

மாறாக நீங்கள் சட்ட ரீதியான குழு இல்லை என்றும்,உச்சநீதிமன்ற உத்தரவு படி அமைக்கப்பட்ட குழுவாக இருந்தால் வரவு- செலவு கணக்குகளை ஒப்படைப்போம். இல்லையென்றால் வரவு-செலவு கணக்குகளை காட்ட முடியாது
என்று தீட்சிதர்கள் மறுத்து விட்டனர். இதனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர், இது பற்றி ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக கூறி சென்றனர்.

இதற்கிடையில் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் குறித்து விசாரணை நடத்த இன்று மற்றும் நாளையும் பொதுமக்கள் ஆலோசனை மற்றும் கருத்து கூறலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

 

இதன்படி கடலூர் புதுப்பாளையம் ஆற்றங்கரை தெருவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள துணை ஆணையரிடம் தெய்வத்தமிழ்பேரவை கூட்டமைப்பு, காங்கிரஸ் கட்சி மூத்த துணைதலைவர் ராதாகிருஷ்ணன், தீட்சிதர்களின் தீண்டாமை என மக்கள் அதிகாரம் சார்பில் மனுக்கள் வழங்கப்பட்டன. மேலும் 1 லட்சம் கையெழுத்து பெற்று மனுக்களையும் அவர்கள் ஆணையரிடம் வழங்கினர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.