முக்கியச் செய்திகள்

பணம் கிடைக்காத விரக்தி… கடைக்காரருக்கு கடிதம் எழுதிய திருடன்!

கேரளாவில் திருடச் சென்ற கடையில் எதுவும் கிடைக்காததால், விரக்தியில்
கடைக்காரருக்கு கடிதம் எழுதிவைத்துச் சென்ற திருடனை போலீஸார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், வயநாட்டில், குந்நங்குளம் எனும் பகுதியில் உள்ள அடுத்தடுத்த 3
கடைகளில் திருடன் ஒருவன் கடந்த 10ஆம் தேதி திருட முயன்றுள்ளார். இதில் இரண்டு கடைகளில் இருந்து திருடிய திருடன் பணத்துடன் பக்கத்தில் இருந்த ஆண்களுக்கான ஆடையக கடையில் திருட கடையின் முன்பக்க கண்ணாடி கதவை உடைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். கடையில் உள்ள கல்லாப்பெட்டி காலியாக இருந்ததால் விரக்தியடைந்த திருடன் ஒரு ஜோடி ஆடையை மட்டும் எடுத்துவிட்டு உடைக்கப்பட்ட கதவின் கண்ணாடி துண்டில், கடைக்குள் எதுவும் இல்லை என்றால் எதற்காக கடையை மூடினாய், கண்ணாடிக் கதவாச்சும் தப்பித்து இருக்கும் என கடைக்காரருக்கு குறிப்பு எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்பேட்டா போலீசார் கடையின் சிசிடிவி காட்சிகளை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திருடன் வயநாடு, களிப்பறம்பு பகுதியை சார்ந்த விஸ்வராஜ் என்பது தெரியவந்தது. விசாரணையில், கேரளா முழுவதுமாக பல்வேறு இடங்களில் 60க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் இவர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதனிடையே உடல்நிலை சரியில்லாமல் வயநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த திருடன் விஸ்வராஜை மருத்துவமனை ஊழியர்களின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். கண்ணாடி துண்டில் கடைக்காரருக்கு திருடன் எழுதிவைத்த குறிப்பு தற்போது இணையதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெருமழை: வங்கதேசம் வழியாக கொல்கத்தாவுக்கு பேருந்து சேவை

Halley Karthik

“நவீன தமிழ்நாட்டின் தந்தை கருணாநிதி”- முதலமைச்சர்

Saravana Kumar

அரசு பணிக்காக போலி சான்றிதழ்கள் வழங்கிய வடமாநிலத்தவர்கள்

Janani