முக்கியச் செய்திகள் கட்டுரைகள் விளையாட்டு

மீண்டும் களமிறங்கும் பப்ஜி:விளைவுகளைச் சொல்லும் செய்தி!


அஜெய் வேலு

அது ஒரு காலம்.. இளைஞர்கள் அனைவரும் குனிந்த தலை நிமிராமல், அடக்கமாக இருந்த காலம்.. அதுதான் pub-g காலம். அந்த இளைஞர் பட்டாளத்தின் நாடி நரம்பு இரத்தம் , சதை மூளை என அனைத்திலும் பப்ஜிதான் ஊறியிருந்தது.

காணும் இடமெல்லாம் நீயே!

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

படிக்கும் இடத்தில், பணி செய்யும் இடத்தில், சாலையில் நடக்கும் போதும், ஆலையில் பணி செய்யும் போதும், இரவு படுக்கையிலும், டேபிளில் சாப்பிடும் போதும், நடக்கும் போதும், பஸ்ஸில் பயணம் செய்யும் போதும், ஏன் பைக்கில் போகும் போது டிராபிக் சிக்னலில் கிடைக்கும் அந்த 60 விநாடிகளில் கூட அவர்கள் தவறாமல் pubg விளையாடினர்.

இதனால் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்து நாடு முழுவதும் பப்ஜியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. மும்பை உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

பப்ஜி விளையாட பெற்றோர் தடை விதித்தால், சிலர் விபரீத முடிவுகளை எடுக்கவும் செய்தனர். இதனால் பப்ஜிக்கு தடை விதிக்கும் கோரிக்கை வலுத்தது. இந்த நேரத்தில் தான் கொரோனா பெருந்தொற்று நாடு முழுவதும் வேகமாகப் பரவியது.

அத்தோடு, இந்திய எல்லையில் சீனாவும் தனது ஆக்கிரமிப்பை காட்டத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக pubg விளையாட கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அரசு தடை செய்தது. இந்தியாவில் pubg விளையாட்டு உள்ளிட்ட 118 செயலிகளை அரசு தடை செய்தது. இந்தத் தடைக்கு ஒருபுறம் வரவேற்பும், மற்றொரு புறம் எதிர்ப்பும் எழுந்தது.

முன்பதிவு செய்த 1 கோடி பேர்!

நண்பர்கள் பட்டாளத்துடன் இணையத்தில் விளையாடும் பப்ஜிக்கு மாற்றாக பல விளையாட்டு செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் pubgகு எதனாலும் ஈடு கொடுக்க முடியவில்லை.

களையிழந்து காணப்பட்ட இளைஞர்களுக்கு காதில் தேனாய் வந்து பாய்ந்த செய்தி pubg மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என்பதாகும்.

“Battle grounds” என்ற பெயரில் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. பப்ஜி விளையாட்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், சுமார் 1 கோடி பேர் கூகுள் பிளே ஸ்டோரில் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். வரும் ஜூன் மாதம் 10-ம் தேதி பப்ஜி மீண்டும் களத்திற்கு வரவுள்ளது.

ஆனால் இளையதலைமுறை பெருங்கூட்டத்தின் கனவாக இருக்கும் இந்த pubgயால் சீரழிந்த குடும்பங்கள் ஏராளம். இந்த விளையாட்டின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு கூட்டம், மறுபக்கம் இது வந்தால் மீண்டும் என்னவெல்லாம் அசம்பாவிதங்கள் நிகழுமோ என இந்த விளையாட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குமுறுகிறார்கள்.

விளையாட்டு வினையான நிகழ்வுகள்!

பப்ஜி விளையாட்டு ஒரு வகையான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த அடிதடி, ஆயுதம், சண்டை என விளையாட்டிலேயே விளையாட்டாளர்கள் மனதில் வன்மமும், வன்முறையும் ஒருசேர வேர்விட்டு வளர்கிறது என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பப்ஜி கேமை தொடர்ந்து பல மணி நேரங்களாக விளையாடிய போது இளைஞர் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் மரணமடைந்ததார். அதேப்போல் கர்நாடக மாநில பெல்காமில் தந்தை பப்ஜி விளையாட அனுமதிக்காததால், அவரை தன் மகனே வெட்டி கொலை செய்த கோர சம்பவமும் நினைசுக்கு வருகிறது.

தமிழகத்திலும் இதுபோல் ஒரு சில சம்பவங்கள் பதிவாகின. பாண்டிச்சேரியில் 9-ம் வகுப்பு மாணவன் தொடர்ந்து பப்ஜி விளையாடியதால் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்ட உயிரிழந்தார். இது போல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல பல பாதிப்புக்களையும் கடும் தாக்கத்தையும் இந்த விளையாட்டு ஏற்படுத்தியுள்ளது.

இது மட்டுமின்றி, தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பிற்கே வேட்டுவைக்கும் விதமாக இந்த செயலிகள் செயல்பட்டதே தடைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது

இந்நிலையில் இப்போது மீண்டும் வருகிறது… பப்ஜி.. ஏற்கனவே நாடு கொரோனா 2.0 –வில் அல்லோலப்படுகிறது. இனிமேல் pubg2.0-வில் என்னவெல்லாம் பாடு படபோகிறதோ!!!!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

Halley Karthik

யுபிஎஸ்சி தேர்வில் 6வது முயற்சியில் வெற்றி.. தந்தையின் கனவை நிறைவேற்றிய மகள்!

EZHILARASAN D

ஆன்லைன் சூதாட்ட தடை? – ஆளுநர் மாளிகை தகவல்

EZHILARASAN D