ஓசூரில் பப்ஜி விளையாட்டால் ஐடிஐ படிக்கும் இளைஞர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியில் வசித்து வரும் ஜெயலட்சுமி, பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவரது இளைய மகன் ரவி, ஐடிஐ முதலாமாண்டு படித்து வந்தார். இவர் பப்ஜி விளையாட்டை அதிகம் விளையாடி வந்துள்ளார். மத்திய அரசு பப்ஜி விளையாட்டுக்கு தடை விதித்த போதிலும், பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து இளைஞர்கள் விளையாடி வருவது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் மாணவர் ரவியும் பெரும்பாலான நேரங்களில் அதிலேயே மூழ்கியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் அவரது தாய் ஜெயலட்சுமி நேற்று கட்டட வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது வீடு பூட்டப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை திறந்தபோது ரவி தூக்கிட்டு உயிரிழப்பு செய்து கொண்டது தெரிய வந்தது. பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் இளைஞர் உயிரிழப்பு செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவர்களின் நலன்கருதி அனைத்து இணையதளங்களிலும் இதுபோன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய முடியாத வகையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.