தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு : மாண்டியாவில் முழுஅடைப்பு போராட்டம்!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரியில் 15 நாள்களுக்கு 500 கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது.…

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

காவிரியில் 15 நாள்களுக்கு 500 கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கர்நாடகா உச்ச நீதிமன்றம் சென்றது. ஆனால் கர்நாடகா அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதற்கு பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) மற்றும் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில காவிரியில் நீர் திறப்பதை கண்டித்து மாண்டயாவில் இன்று முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாண்டியா நகரில் உள்ள தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள் ஆதரவு அளிக்க என விவசாய அமைப்புகள் வலியுறுத்தி உள்ளனர்.

அரசு பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. முழு அடைப்பு போராட்டத்தின்போது அத்துமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பரமேஸ்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் மாண்டியாவில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மைசூரு, சாம்ராஜ்நகர், ராமநகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.