தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசினால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையத்தின் நிபந்தனையின் பேரில், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்களின் பரப்பளவுக்கு தகுந்தவாறு சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 600 சதுர அடிக்கும் குறைவாக உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் 1,200 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு 50 சதவீத வரி உயர்வும், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 75 சதவீத வரி உயர்வும், 1,800 சதுர அடிக்கும் அதிகமாக உள்ள கட்டடங்களுக்கு 100 சதவீத சொத்து வரி உயர்வும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது உள்ள சொத்து வரியில் வணிகப் பயன்பாட்டில் உள்ள தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீத வரி உயர்வு விதிக்கப்பட்டுள்ளது.