15வது ஐபிஎல்-ன் இன்றைய, எட்டாவது போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
15வது ஐபிஎல்-ன் எட்டாவது போட்டி மும்பையில் உள்ள, வான்கடே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் களம்கண்டன.
இதற்கு முன்பு பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு அணியுடன் களம் கண்டது அதில் 6 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 5 விக்கெட்டுகள் எடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது. அதேபோல, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதற்குமுன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் களம் கண்டது அதில் 9 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 6 விக்கெட்டுகள் எடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
அதனைத்தொடர்ந்து, நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு அணியுடன் களம் கண்டது அதில் 4 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 3 விக்கெட்டுகள் எடுத்து ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து விறுவிறுப்பாக பேட்டிங் செய்த, பஞ்சாப் கிங்ஸ அணி 9 ஓவர் முடிவில் 4 விக்கெட் வித்தியாசத்தில், 78 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி 18.2 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, 4 விகெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் கொல்கத்தா வீரர் உமேஷ் யாதவ். இதனால், கொல்கத்தாவுக்கு 138 ரன்கள் இலக்காக இருந்தது,
அதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 ஓவர் முடிவில், 1 விக்கெட்டுக்கு 25 ரன்களை எடுத்தது, அதனைத் தொடர்ந்து 14.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 141 ரன்களை எடுத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதில், 31 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆண்ட்ரூ ரஸல் அசத்தினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: