முக்கியச் செய்திகள் இந்தியா

டெல்லி அறிவாலயம் – இன்று திறப்பு விழா

டெல்லியில் அண்ணா கலைஞர் அறிவாலய திமுக கட்டட திறப்பு விழா, இன்று மாலை நடைபெறவுள்ளது.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக கடந்த 30-ஆம் தேதி டெல்லி சென்றார். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரை 31ஆம் தேதி சந்தித்தார்.

அதன் தொடர்ச்சியாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்தார். அப்போது அண்ணா- கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். மேலும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவாலுடன் அங்குள்ள அரசு பள்ளி பார்வையிட்டார்.

டெல்லி தீன்தயாள் மார்க் பகுதியில் திமுக சார்பில் கட்டியுள்ள அண்ணா- கலைஞர் அறிவாலய கட்டட திறப்பு விழா இன்று நடைபெறவுள்ளது. இதற்காக மூன்று நாட்களுக்கு முன்னரே டெல்லி வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இதனையடுத்து இன்று மாலை நடைபெறும் விழாவில், தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்றாக பங்கேற்கவுள்ளதால், அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சர்வதேச புகைப்பட விருதை பெறும் தமிழர் – முதலமைச்சர் வாழ்த்து

Janani

கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

Janani

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் தீ விபத்து