தாயை பராமரிக்காத மகளிடம் இருந்து பறிக்கப்பட்ட சொத்து! வருவாய் அலுவலரின் உத்தரவை உறுதி செய்த உயர்நீதிமன்றம்

தாயை பராமரிக்காத மகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்தின் பத்திர பதிவை வருவாய் அலுவலர் ரத்து செய்தது சரியே என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரூப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ராஜம்மாள் என்பவர் தமக்கு…

தாயை பராமரிக்காத மகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்தின் பத்திர பதிவை வருவாய் அலுவலர் ரத்து செய்தது சரியே என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரூப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ராஜம்மாள் என்பவர் தமக்கு சொந்தமான சுமார் மூன்று ஏக்கர் நிலத்தை கடந்த 2016ம் ஆண்டு தனது மகளான சுகுனாவிற்கு எழுதி வைத்தார். உறுதியளித்தப்படி , மகள் தம்மை கவனிக்காததால், பத்திர பதிவை ரத்து செய்யக்கோரி ராஜம்மாள் உடுமலைப்பேட்டை தாலுகா வருவாய் அலுவலரிடம் மனு ளித்தார்.

ராஜம்மாளின் கோரிக்கையை பரிசீலித்த உடுமலைப்பேட்டை தாலுகா வருவாய் அலுவலர் சுகுனா பெயருக்கு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனை அடுத்து பத்திரத்தை ரத்து செய்த வருவாய் அலுவலர் உத்தரவை எதிர்த்து மகள் சுகுணா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அப்போது, தாயை பராமரிப்பதாக கூறியதாலேயே சுகுணாவிற்கு சொத்து எழுதி வைக்கப்பட்ட நிலையில் அந்த நிபந்தனையை அவர் மீறியதால் சொத்து பத்திரம் ரத்து செய்யப்பட்டதாக வருவாய் அலுவலர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து உரிய விசாரணைக்கு பின்னர் சட்டப்படியே சொத்து பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வருவாய் அலுவலரின் உத்தரவில் தலையிட தேவையில்லை எனக் கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.