சொத்து தகராறு: தம்பி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய அண்ணன்

சேலத்தில் சொத்து தகராறு காரணமாக, தம்பி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடிய அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர். சேலம், தாதகாப்பட்டி, பெருமாள் கோவில் மேடு பகுதியை சேர்ந்த கேசவனுக்கும், அவரது அண்ணன்…

சேலத்தில் சொத்து தகராறு காரணமாக, தம்பி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடிய அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம், தாதகாப்பட்டி, பெருமாள் கோவில் மேடு பகுதியை சேர்ந்த கேசவனுக்கும், அவரது அண்ணன் சரவணனுக்கும் சொத்துப்பிரிப்பு தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இளையமகன் கேசவன் குடும்பத்தினருடன் வசித்து வரும் தாய் கல்யாணி, சொத்து பிரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சரவணன், தம்பியின் வீட்டிற்கு சென்று தாயிடம் தகராறில் ஈடுபட்டு, பின்னர் மறைத்து கொண்டு வந்திருந்த பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தின் போது வீட்டிலிருந்த கேசவனின் மனைவி யசோதா மற்றும் அவரது 5-மாத குழந்தையை அருகிலுள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இதில் யசோதாவிற்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய சரவணனை தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.