Skip to content
December 23, 2025
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » project to start bank account for students in schools guided release
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம்! : வழிகாட்டுதல் வெளியீடு

பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கும், ஆதார் எண்களை இணைப்பதற்குமான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கும், ஆதார் எண்களை இணைப்பதற்குமான வழிகாட்டுதல்கள் தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பள்ளிக்…

Author Avatar

Web Editor

June 3, 20249:37 am bank accountDPIProjectSchoolsstudentsTamilNadu

பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கும், ஆதார் எண்களை இணைப்பதற்குமான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கும், ஆதார் எண்களை இணைப்பதற்குமான வழிகாட்டுதல்கள் தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, தனியார் பள்ளி இயக்குநர்கள் சார்ப்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, தனியார் பள்ளி இயக்குநர்கள் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

“தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் அனைத்து மாணவர்களும் இடை நிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவி மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகின்றன. அவை உரிய பயனாளிகளுக்கு குறித்த நேரத்தில் நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்ய, வங்கிக் கணக்குகளிலேயே நேரடியாக பணத்தை அனுப்பும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதனை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த மாணவர்களின் பெயரில் வங்கிக் கணக்கு இருப்பது அவசியம். எனவே, பள்ளிகளிலேயே வங்கிக்கணக்கு தொடங்க வயது அடிப்படையில் 2 நிலைகளில் பணிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, 5 முதல் 10 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு அவர்களின் பெற்றோர் அல்லது காப்பாளரின் பெயரில் இணைக் கணக்காக தொடங்கப்படும்.

இதையும் படியுங்கள் : கோடை விடுமுறை நிறைவு – சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் பணிகள் தொடக்கம்!

மாணவர், பெற்றோர் இணைந்து இந்த கணக்கை பராமரிக்க முடியும். ஆரம்பத் தொகை ஏதுமில்லாத கணக்காக இருக்கும். 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் நகல், மாணவரின் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் அவசியம்.

தலைமையாசிரியர்களை பொருத்தவரை தங்களது பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வங்கிக்கணக்கு தொடங்குதல், ஆதார் விவரம் புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளிக்கு வங்கிப் பணியாளர்கள் வரும் போது, அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். வங்கிக்கணக்கு விவரங்கள் எமிஸ் தளத்தில் விடுபட்டிருந்தால் அவற்றை மாணவர்களிடம் இருந்து பெற்று பதிவு செய்ய வேண்டும்”

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

“உழவர்களின் துயரங்கள் அனைத்தும் விரைவில் தீரும்” – அன்புமணி உழவர் நாள் வாழ்த்து!

By Web Editor December 23, 2025

தமிழ்நாட்டில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு!

By Web Editor December 23, 2025

வாக்காளர் திருத்த பணிகள் – சென்னையில் டிச.23 முதல் ஜன.18 வரை நடைபெறும் என அறிவிப்பு!

By Web Editor December 23, 2025

“அனைத்து உழவர்களுக்கும் எனது தேசிய உழவர் தின வாழ்த்துக்கள்” – நயினார் நாகேந்திரன்!

By Web Editor December 23, 2025
#ट्रेंडिंग हैशटैग:bank accountDPIProjectSchoolsstudentsTamilNadu

Post navigation

Previous Previous post: ஒகேனக்கல்: நீர்வரத்து 2000 கனஅடியாக அதிகரிப்பு!
Next Next post: நாளை வாக்கு எண்ணிக்கை: தமிழ்நாடு முழுவதும் ஏற்பாடுகள் தீவிரம்!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading