ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணையில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணையில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்த வழக்கு இன்று நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், “ஒருவர் தனது கருத்தை வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது” என்று நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், பா.ரஞ்சித் மீதான வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இடைக்கால விதித்தும், இதுகுறித்து அரசு தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கினை இறுதி விசாரணைக்காக ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.








