கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில், பிரியங்கா காந்தி போட்டியிட கோரி, கார்த்தி சிதம்பரம் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலும், ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவோரும், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோரும், விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடக் கோரி, சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.







