சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்ற சிபிஎஸ்இ!

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்று, ரம்ஜான் திருநாளில் நடைபெற இருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்புத் தேர்வுகள், வேறு தேதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட்…

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்று, ரம்ஜான் திருநாளில் நடைபெற இருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்புத் தேர்வுகள், வேறு தேதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சிபிஎஸ்இ இயக்குநருக்கும் எழுதியிருந்த கடிதத்தில், இந்த ஆண்டு மத்திய, மாநில அரசுகள், மே மாதம் 14-ஆம் தேதி ரம்ஜான் விடுமுறை அறிவித்துள்ளதாகவும், ஆனால், பிறை தென்படுவதைப் பொறுத்து, ரம்ஜான் திருநாள் மாற வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். எனவே, மே 13 மற்றும் 15-ம் தேதிகளில் நடத்தப்படும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வுகளை, வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து மே 13ஆம் தேதி முதல், மே 16ஆம் தேதி வரை நடைபெற இருந்த, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகள், வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ இணையதளத்தில் தேர்வு தேதிகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.