முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் Health

தனியார் மருத்துவமனைகள் மக்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

தமிழ்நாடு காது, மூக்கு, தொண்டை மருத்துவ கூட்டமைப்பின் சார்பில் தமிழில் முதல் முறையாக நடத்தப்படும் மருத்துவ அறிவியல் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை அடையாறு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை வளாகத்தில் காது, மூக்கு, தொண்டை கூட்டமைப்பின் சார்பில் மருத்துவ அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டின் துவக்க விழாவிற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகை தந்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மருத்துவர் மோகன் காமேஸ்வரனின் முன்முயற்சியால் தமிழிலேயே நடைபெறும் “காது, மூக்கு, தொண்டை, தலை & கழுத்து மருத்துவ அறிவியல் மாநாட்டை” தமிழ் விளைவித்த மகிழ்ச்சியோடு தொடங்கி வைத்தேன். துபாயில் நடைபெற்ற காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிகழ்வில் 10 தங்கப் பதக்கங்கள் பெற்றதற்கு காரணமாக இருந்தவர் மருத்துவர் மோகன் காமேஷ். அவர் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு முழுக்க முழுக்க தமிழில் நடைபெற இருக்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் என்று சொல்லும் பொழுது முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஞாபகம் வருகிறது. தமிழை தமிழே என்று சொல்லும் பொழுது கிடைக்கும் சுகம் எங்கும் கிடைப்பதில்லை. பொதுவாக இதுபோன்ற மாநாடுகள் ஆங்கிலத்தில் தான் நடக்கும். அதிலும் கோட்டு சூட்டு போட்டு தான் நடக்கும்.

ஆனால் இன்று அனைவரும் வேட்டி சட்டையில் வந்திருக்கிறார்கள். மருத்துவர் மோகன் காமேஷ், எனக்கு மட்டுமல்ல கலைஞருக்கும், எங்கள் குடும்பத்திற்கு அவர்தான் மருத்துவர். முத்தமிழ் பேரவையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டை பார்ப்பதற்கு கலைஞர் இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பார். கலைஞர் பெறாத பிள்ளைகள் எத்தனையோ பேரில் மோகன் காமேசும் ஒரு பிள்ளை. மருத்துவ நூல்களை தமிழில் மொழி பெயர்த்து அண்மையில் வெளியிட்டு இருக்கிறோம். நிர்வாகத்தில் தமிழ்,, கோவில்களில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழ் என்று அதை வலியுறுத்தி செயல்படுத்தும் அரசாக இந்த அரசு உள்ளது.

தற்போது குழந்தைகளுக்கு காது கேளாதது அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டதாலும் இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நவீன மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு மருத்துவமனைகள் மூலமாகவும், காப்பீட்டு திட்டத்தின் மூலமாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது அரசு மருத்துவமனை மட்டும் இல்லாமல் தனியார் மருத்துவ மணைகளும் அதை பின்பற்ற வேண்டும்.

மேலும் அதிக அளவில் மக்கள் தொகை உள்ள நம் நாட்டில் தனியார் மருத்துவமனைகளும், பொதுமக்களிடம் இருந்து தேவையான அளவில் கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். ஏனென்றால் மருத்துவத்துறையில் தனியார் மருத்துவத்திற்கும் பங்களிப்பு அதிகம் உள்ளது. அதில் கட்டணம் என்பது ஏழைகளுக்கு உதவுவதாக அமைய வேண்டும் . கல்வியும் மருத்துவமும் சேவை துறையை சேர்ந்தது. அது சேவை துறையாகவே செயல்பட வேண்டும். உலகில் திறமையான மருத்துவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். சென்னை மெடிக்கல் சிட்டி என்றுதான் அழைக்கப்படுகிறது. எந்த நோய் வந்தாலும் அது சரிபடுத்தக்கூடிய அனைத்து வசதிகளும் தமிழகத்தில் உள்ளது என்று முதலமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. எழிலன், கவிஞா் வைரமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனர். மேலும் மருத்துவத்துறை சாா்ந்த மருத்துவ வல்லுநா்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு காது, மூக்கு, தொண்டை நலன் தொடா்பான ஆராய்ச்சிகள், நவீன தொழில்நுட்ப சிகிச்சைகள், மருத்துவ முறைகள் குறித்து தமிழிலேயே சிறப்புரையாற்ற உள்ளனர். மருத்துவ அறிவியல் சாா்ந்த இந்த மாநாடு முழுக்க, முழுக்க தமிழில் நடைபெறது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram