முக்கியச் செய்திகள் தமிழகம்

முதியோர்களுக்கான உதவி தொகையை திமுக அரசு நிறுத்தியது- எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு  உழைக்கும் திறனற்ற ஏழை முதியோர்களுக்கான உதவித் தொகையை நிறுத்தியது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாடியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர்-தாரமங்கலம் மெயின் ரோட்டில் வேலகவுண்டனூரில் ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தை திறந்து வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் மற்றும் முதலமைச்சர் என பல பதவிகள் வகித்துள்ளேன். இன்று பங்கேற்ற நிகழ்ச்சி மிகவும் உன்னதமான நிகழ்ச்சி. ஒவ்வொருவரும் தாய், தந்தையரை தெய்வமாக மதிக்க வேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கையில் ஏற்றம் பெறுவோம், நோய் நொடி இல்லாமல் எல்லாம் வாய்ப்பும் கிடைக்கும். ஒரு சிலர் தாய் தந்தையரை எதிரியாக நினைக்கிறார்கள். தாய், தந்தையரை  மறந்து ஆதரவளிக்காமல் முதியவர்கள் வாழ வழியில்லாமல் இருக்கும் முதியோர்களும் ஆதரவாக இருக்கிறது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் ஏழை மக்கள் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். ஏழை என்ற சொல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கொள்கை லட்சியம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் அதை நிறைவேற்றி காட்டியவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா என்று கூறினார்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உழைக்கும் திறனற்ற முதியோர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் அறிவிப்பை வழங்கி ஆயிரம் ரூபாய் வழங்கினார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முதியோர் உதவித்தொகை பெற கிடைக்கப்பெற வழியற்றதை கேள்விப்பட்டு நான், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழகம் முழுவதும் தகுதியான 5 லட்சம் முதியோர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பு வழங்கினேன். அதன் வாயிலாக கிட்டத்தட்ட 4 லட்சம் முதியோர்களுக்கு அதிமுக அரசு அறிவித்த முதியோர் உதவித் தொகை கிடைக்கப் பெற்றது என்றார்.மேலும், ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக அரசு வந்தவுடன் உழைக்கும் திறனற்ற ஏழை முதியோர்களுக்கு வழங்கிய முதியோர் உதவித் தொகையை திமுக அரசு நிறுத்தியது. முதியோர்கள் துன்பம், துயரம் அடையக் கூடிய கூடாது என்பதற்காக அதிமுக அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தியது. முதியோர்களை மறந்து விடாதீர்கள், கைவிட்டு விடாதீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

UTurn திமுக அரசு – இபிஎஸ் ஆவேச ட்வீட்

G SaravanaKumar

கோகுல்ராஜ் கொலை வழக்கு; அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நீதிபதிகள் நேரடியாக ஆய்வு, 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

Web Editor

”புலிகள் காலத்தைப்போல் இலங்கை தமிழர்கள் தற்சார்பு பெற வேண்டும்”- விக்னேஸ்வரன்

Web Editor