முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. அதே நேரம் தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் அமர்வு வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை பார்ப்போம்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1) டெண்டர் ஒதுக்கீட்டில் எஸ்.பி. வேலுமணி செல்வாக்கை செலுத்தினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை
2) ஆட்சி மாற்றத்துக்கு பின் மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியது ஏன்?
3) அதிகாரிகள் தவறால் அல்லாமல் எஸ்.பி. வேலுமணி செல்வாக்கால் முறைகேடு நடந்ததாக நிரூபித்திருந்தால் வழக்கு ரத்து செய்யப்பட்டிருக்க மாட்டாது
4) டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை தொடர்ந்து விசாரித்து எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்களை கண்டுபிடித்தால் அவரை வழக்கில் சேர்க்கலாம் –
5) தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து விவரங்களின் அடிப்படையில் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அந்த வழக்கு ரத்து செய்யப்படவில்லை.
6) அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகளின் தலையீட்டில் இருந்து காவல் துறையை விடுவிக்க வேண்டும்
என நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.