முதலமைச்சர் ஸ்டாலின் மோதல்களைத் தவிர்ப்பவரே தவிர மோதலுக்கு தயாராக இருப்பவர் அல்ல என திமுக நாளேடான முரசொலி தெரிவித்துள்ளது.
குடியரசு தினவிழாவையொட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டது குறித்து முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, குடியரசு நாளில் மேலும் வளர்ந்து இடைவெளி அதிகமாக ஆளுநர் இடம் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேநீர் விருந்துக்கான அழைப்பிதழில் ‘தமிழ்நாடு’ என்ற அரசமைப்புச் சட்ட ரீதியான பெயரைப் பதிவு செய்ததுடன், முதலமைச்சருக்கு அழைப்பிதழை முறைப்படி அனுப்பி, தொலைபேசியில் அழைப்பும் விடுத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சசரும் பெருந்தன்மையான அணுகுமுறையையே குடியரசு நாளை ஒட்டிய நிகழ்வுகளிலும் பின்பற்றினார். நமது முதலமைச்சர் மோதல்களைத் தவிர்ப்பவரே தவிர, மோதலுக்குத் தயாராக இருப்பவர் அல்ல என்றும் முரசொலி கூறியுள்ளது.
சீரான ஆட்சி நிர்வாகம் மற்றும் மக்கள் பணிகள் ஆகியவையே முதலமைச்சருக்கு முக்கியம். அதனால் குடியரசு நாளில், ‘மெல்லுவதற்கு’ ஏதாவது கிடைக்கும் என்று எண்ணி எதிர்பார்த்தவர்கள் ஏமாந்தே போனார்கள் என முரசொலி வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.