குஜராத்தில் உலக வர்த்தக மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்!

குஜராத் வர்த்தக மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் வர்த்தக மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். …

குஜராத் வர்த்தக மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் வர்த்தக மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து,  முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

மேலும்,  இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (08-01-24) குஜராத்திற்கு சென்றடைந்தார்.  துடிப்பான குஜராத் என்ற தலைப்பிலான 10-வது வர்த்தக மாநாடு இன்று தொடங்கி 3 நாட்கள் காந்தி நகரில் நடைபெறுகிறது.  இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் 34 கூட்டணி நாடுகளும், 16 அமைப்புகளும் பங்கேற்கின்றன.

இதையும் படியுங்கள்:  பொங்கலை பண்டிகை: முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை!

முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சையத் அல் நயான், செக் குடியசு நாட்டின் பிரதமர்,  திமோர் லெஸ்டே அதிபர்,  மொசாம்பிக் அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

மேலும்,  இந்த மாநாட்டில்,  முக்கிய தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கவுதம் அதானி,  டாடா நிறுவனத் தலைவர்,  மைக்ரோசாப்ட் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.