இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தி பிரதமர் மோடி மகத்தான சாதனை செய்துள்ளார் என மத்திய இணையமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்.
இது குறித்து கூறியதாவது, “கொரோனாவின் ஆரம்பத்தில் என்.95 மாஸ்க் என்பதே என்னவென்று தெரியாமல் இருந்தோம், தற்போது மாஸ்க், பி.பி.இ கிட் உள்ளிட்டவை தயாரித்து நாம் பிறருக்கு வழங்கி வருகிறோம்.
தற்போது உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரித்து அதை 100 கோடிக்கு மேலாக செலுத்தியுள்ளோம், உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது இது பிரதமரின் சாதனை ஆகும்.
ஆரம்பத்தில் தமிழகத்தில் தடுப்பூசி தொடர்பாக தவறான தகவல்களை தந்து அரசியல் செய்யப்பட்டது, ஆனால் தற்போது அதை எல்லாம் கடந்து தமிழகத்திலும் 10 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடும்பனிப்பொழிவு நேரத்தில் காஷ்மீரில் தொடங்கி, லட்சத்தீவு, அருணாச்சல் பிரதேசம், வனப்பகுதியில், மலை பிரதேசங்களில் வசிப்பவர்கள், தொலை தூரப்பகுதியில் வசிப்பவர்கள் என அனைத்து இடங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
100 கோடி தடுப்பூசி என்பது ஒரு மகத்தான மைல் கல் ஆகும், இதற்காக பிரமருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன்.
யாரேனும் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் அவரை.கள் எந்த அச்சமும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இன்னமும் கொரோனா பாதிப்பு உள்ளது, எனவே திருவிழா ,பண்டிகை நேரம் என்பதால் கவனமுடன் மக்கள் இருக்க வேண்டும்” என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.








