கோவை மூதாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்ற பிரதமர் மோடி

107 வயது இயற்கை விவசாயியான கோவை பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியிடம் காலில் விழுந்து பிரதமர் மோடி  ஆசீர்வாதம் பெற்றார். டெல்லியில் உலக சிறுதானிய மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில், சர்வதேச…

107 வயது இயற்கை விவசாயியான கோவை பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியிடம் காலில் விழுந்து பிரதமர் மோடி  ஆசீர்வாதம் பெற்றார்.

டெல்லியில் உலக சிறுதானிய மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023க்கான அதிகாரப்பூர்வ நாணயம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட கோவை மாவட்டம், தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியான பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.

இதையும் படிக்க: “கடவுள் தனது குழந்தையுடன் தொடர்புகொள்வது போல” – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், உலக சிறுதானியங்கள் மாநாட்டில் பங்கேற்ற கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியான பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றார் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். எனது பிரதமர், எனது பெருமை!’ என பதிவிட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.