நாளை முதல் மகளிர் காவலர்களுக்கு 8 மணிக்கு ரோல் காலிங்

நாளை முதல் மகளிர் காவலர்களுக்கு 8 மணிக்கு ரோல் காலிங் நடைபெறும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். பெண் காவலர்கள், குடும்பத் தலைவிகளாகவும் இருந்து கொண்டு கடினமான காவல் பணியையும்…

நாளை முதல் மகளிர் காவலர்களுக்கு 8 மணிக்கு ரோல் காலிங் நடைபெறும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

பெண் காவலர்கள், குடும்பத் தலைவிகளாகவும் இருந்து கொண்டு கடினமான காவல் பணியையும் செய்து வருவதால், அவர்களின் நீண்டநாள் கோரிக்கையான ‘ரோல்-கால்’ எனப்படும் காவல் வருகை அணிவகுப்பு, இனிமேல் காலை 7 மணி என்பதற்கு பதிலாக 8 மணி என்று மாற்றியமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் போலீசாரின் பொன் விழா நிகழ்வில் அறிவித்திருந்தார்.

இதையும் படிக்க: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்…விமர்சனங்கள்…பதிலடிகள்…சட்டச்சிக்கல்கள்…

அதன்படி, நாளை காலை சென்னை காவல் துறை உடனடியாக இதனை நடைமுறைக்கு கொண்டு வருகிறது. நாளை காலை 8 மணிக்கு மகளிர் போலீசாருக்கு ரோல் கால் நடத்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.