ஆர்ஆர் ஆர் படத்தின் நாயகர்களில் ஒருவரான நடிகர் ராம் சரண் மற்றும் அவரது தந்தை சிரஞ்சீவி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவான இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி ரிலீஸானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்க: ’நாட்டு நாட்டு’ Vibe-ல் பிரபுதேவா – வீடியோ இணையத்தில் வைரல்!
இப்படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளது. வென்றது. திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ராம் சரண் மற்றும் அவரது தந்தை சிரஞ்சீவி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து, அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில், ‘இந்திய சினிமாவின் ஜாம்பவான்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. தெலுங்கு திரையுலகம் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டு-நாட்டு பாடலுக்காக ஆஸ்கார் விருது பெற்ற ராம் சரண் மற்றும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.
Delighted meeting @KChiruTweets and @AlwaysRamCharan – two legends of Indian Cinema.
The Telugu film industry has significantly influenced India's culture & economy.
Have congratulated Ram Charan on the Oscar win for the Naatu-Naatu song and the phenomenal success of the ‘RRR’. pic.twitter.com/8uyu1vkY9H
— Amit Shah (@AmitShah) March 17, 2023
-ம.பவித்ரா