சென்னையில் பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் பொதுமக்கள பயண்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. 15 கிலோமீட்டர் கொண்ட இந்த மெட்ரோ வழித்தடம் பொதுமக்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு தற்போது பயன்பாட்டிற்கு வர உள்ளது.
சென்னை பூந்தமல்லி – வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் நாளை திறந்து வைக்க உள்ளனர். இதற்காக நாளை காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து சாலை மார்க்கமாக போரூர் மெட்ரோ ரயில் நிலையிம் வருகிறார். அங்கு முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தை திறந்து வைக்கிரார். பின்னர் இருவரும் மெட்ரோ ரயிலில் பயணிக்க உள்ளனர்.
இதற்காக பிரதமர் செல்லும் வழித்தடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், அவற்றை திறந்து வைக்கவும் பிரதமர் வருகிறார். சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஆகியவற்றில் துறைமுகத் திட்டங்களைத் திறந்து வைக்கவும், அவற்றுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் வருகிறார்.
பழனி, வேலூர் கன்டோன்மென்ட், அம்பாசமுத்திரம், பரமக்குடி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் ஐந்து ‘அம்ரித்’ ரயில் நிலையங்களை பிரதமர் திறந்து வைக்கிறார்.
ஐஐடி (IIT) சென்னையில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தை (Sudha Gopalakrishnan Brain Centre) பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார்.
சென்னையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் வழிபாடு மற்றும் பூஜையில் பங்கேற்கிறார்.




