முக்கியச் செய்திகள் உலகம் வணிகம்

‘மெட்டா’ ஆனது பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் !

சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக்கின் பெயர், மெட்டா (Meta) என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக்கின் பெயர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ‘பேஸ்புக்’ ஆண்டு கூட்டத்தின்போது, பேசிய அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க் , பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மாற்றி உள்ளதாகத் தெரிவித்தார்.

‘சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டதாகவும், அது அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது நிறுவனத்தின் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாகவும், தங்கள் ‘ஆப்’களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை எனவும், மார்க் ஜக்கர்பெர்க் தெரிவித்துள்ளார் .

மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி பேஸ்புக் நிறுவனம் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அமைச்சர் தங்கமணி தேர்தல் பரப்புரை

Halley karthi

“ராஜேந்திர சோழனுக்கு அரசு விழா” – முதலமைச்சர்

Halley karthi

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 11% அதிகரிப்பு

Gayathri Venkatesan