நாடுமுழுவதும் 75 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

நாடுமுழுவதும் புணரமைக்கப்பட்ட 75 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புணரமைக்கப்பட்ட சென்னை பூங்கா ரயில் நிலையம் உட்பட நாடுமுழுவதும் 75 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “இந்திய ரயில்வே ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் போக்குவரத்து சாதனமாகும். இன்று மேற்கொள்ளப்படும் ரயில்வே மேம்பாட்டுப் பணிகள் 30-40 ஆண்டுகளுக்கு முன்பே முடிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பணிகள் குறித்து முந்தைய அரசாங்கங்கள் ஒருபோதும் முன்னுரிமை அளித்ததில்லை. பாஜக அரசு கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலையை மாற்றத் தொடங்கியது. இன்று, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் ஒரு பெரிய சீரமைப்பிற்கு உட்பட்டுள்ளன. அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ், 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. அதில் பலவற்றில் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன. இன்று 75 நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.