யுடியூபில் தனது அப்பாவித்தனமான நகைச்சுவைக்கென தனி ரசிகர்களை கொண்டவர் பாரத். இவர் லோஷ் கனகராஜ் தயாரிப்பில் ‘மிஸ்டர் பாரத்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குநர் நிரஞ்சன் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபல யுடியூபர் பாரத் கதாநாயகராகவும், கட்சி சேரா என்ற சாய் அபியங்கரின் பாடல் மூலம் பிரபலமடைந்த சம்யுக்தா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், விஸ்வநாதன் பால சரவணன், நிதி பிரதீப், சுந்தர்ராஜன், ஆதித்யா கதிர், சிபி சக்ரவர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு பேட்டைகாலி, மிடில்கிளாஸ் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த பிரணவ் முனிராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலாக மல்லிக மொட்டு பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு ப்ரோமோ வீடியோ மூலம் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மிஸ்டர் பாரத் திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




