முக்கியச் செய்திகள் தமிழகம்

“மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட போதும் கூட பிரதமர் நடவடிக்கை எடுக்கவில்லை” – சிபிஎம்

மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட பிறகும் கூட நீட் தேர்வு குறித்து பிரதமர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை தொடர்ந்து வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய முதலமைச்சர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். வரும் ஆண்டிலிருந்து நீட் தேர்வு இல்லாத சூழல் உருவாகும். நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்வது வேதனையை தருகிறது. புதிய சட்ட மசோதாவை மையப்படுத்தி நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டும் பிரதமர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்களுக்கு மன நல சிகிச்சை அளிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார். மேலும்,

“ஊரக உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. திமுக சுமூகமாக பேசி இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். கேஸ் சிலிண்டர் விலையேற்றம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தவறாக பேசி வருகிறார். அடுப்பு ஊதி இனி சமையல் செய்ய முடியுமா? மத்திய அரசு விவசாயிகளை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துள்ளது.” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “வரும் 27ம் தேதி மத்திய அரசை கண்டித்து இந்திய அளவில் பந்த் நடைபெறுகிறது. தமிழகத்தில் பந்த் போராட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும். இந்தியில் பேசக்கூடிய மாநிலங்கள் எந்தவொரு வளர்ச்சியும் அடையவில்லை. அரசுத்துறைகளை ஆய்வு செய்த போது கடந்த கால அமைச்சர்கள் ஊழல் செய்தது தெரிய வந்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மீது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.” என்றும் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

உருவானது டவ் தே புயல்!

Vandhana

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்: ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்

Halley karthi

ஒலிம்பிக் தோன்றிய வரலாறு

Vandhana