மத்திய அரசின் நடைமுறை ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் – உயர்நீதிமன்றம்

டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு…

டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்ட விதிகள் 2021ஐ கடந்த பிப்ரவரியில் அமல்படுத்தியது.

இது இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள கற்பனை சுதந்திரத்தை தணிக்கை செய்யும் விதத்திலும், தனி மனித உரிமையை பாதிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா மற்றும் நாடு முழுவதும் உள்ள அச்சு, காட்சி ஊடகங்கள் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் உள்ளிட்டோர் சார்பில் வழக்கு தொடப்பட்டது.

இந்த வழக்கின் மீதான விசாரணையில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது, அந்த உத்தரவு நாடுமுழுவதற்கும் பொருந்தும் இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக டிஜிட்டல் பப்ளிஷர்ஸ் தரப்பில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, “மத்திய அரசு கண்காணிப்பு நடைமுறை மூலம் ஊடகங்களை கட்டுப்படுத்துவது, ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல்.” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி அமர்வு அக்டோபர் நான்காம் வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.