அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு – கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு சம்பந்தமாக அனைத்து துறைகளிலும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்டத்தை 2016ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி, அரசு…

அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு சம்பந்தமாக அனைத்து துறைகளிலும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்டத்தை 2016ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி, அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆய்வுக்கூட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு சம்பந்தமாக அனைத்து துறைகளிலும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுப்படி கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

இதன் மூலம் அரசு வேலைவாய்ப்புகளிலும், பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் பணி நியமனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும். மேலும், நிரப்பப்படாமல் நிலுவையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.