தொடர் கனமழை: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை ஜிவ்வ்!

தொடர் கனமழை காரணமாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாகவும், காய்கறி ஏற்றி வரும் லாரிகளின் வரத்து குறைந்ததாலும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில்,…

தொடர் கனமழை காரணமாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாகவும், காய்கறி ஏற்றி வரும் லாரிகளின் வரத்து குறைந்ததாலும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில், தக்காளி கிலோ 80 ரூபாய்க்கும், அவரை கிலோ 80 ரூபாய்க்கும், முருங்கைக்காய் கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. கேரட் கிலோ 70 ரூபாய்க்கும், பீன்ஸ் கிலோ 80 ரூபாய்க்கும், கொத்தமல்லி, புதினா ஒரு கட்டு 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, காலிப்ளவர், புடலங்காய் மற்றும் பீட்ரூட் ஆகியவை கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 30 ரூபாய்க்கும், கீரை வகைகள், கட்டு 40 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

கோயம்பேடு சந்தையில் இருந்து வாங்கி, சில்லறையாக விற்பனை செய்யப்படும்போது காய்கறிகளின் விலை, கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை அதிகரித்து விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.