மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக, நம் நாட்டிற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வீடுகளுக்கு தடையின்றி சமையல் காஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்ய, ஹோட்டல்கள், தொழிற்சாலைகளுக்கு, வணிக காஸ் சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது அமெரிக்கா- ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் குறைந்தது.சமீபத்தில் வணிக சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் மீதான கட்டுப்பாடுகளை, பெட்ரோலிய அமைச்சகம் நீக்கியது.
இந்த நிலையில், இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்து ரூ.3.106-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 14.2 கிலோ எடை கொண்ட சமையில் சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமுமின்றி ரூ.957.50-க்கு விற்பனையாகிறது.




