மகளிர் டி20 உலகக்கோப்பை : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 13 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 8-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலிய அணி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.