மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட மைதேயி, குகி சமூகத்தினர் இடையே இனக் கலவரம் மூண்டது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்தனர். இதனை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலகினார்.
இதையடுத்து மணிப்பூரில் கடந்தாண்டு ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி வரும் பிப்.12ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் சுமார் ஓராண்டுக்குப் பிறகு மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ச்செவ்வாய்கிழமை நடைபெற்ற புது டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மணிப்பூர் பாஜக சட்டமன்றக்குழு தலைவராக கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் மணிப்பூரின் புதிய முதலமைச்சராக அவர் பதவியேற்க வாய்ப்புள்ளது.







