முக்கியச் செய்திகள் உலகம்

வங்கதேச விடுதலைப் பொன்விழாவில் இந்திய குடியரசுத் தலைவர்

வங்கதேச விடுதலை பொன்விழா கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.

1971ம் ஆண்டு பாகிஸ்தான் பிடியில் சிக்கியிருந்த வங்கதேசம் விடுதலை பெற்றது. வங்கதேசத்தின் விடுதலைக்காகப் பாகிஸ்தானுடன் யுத்தம் நடத்தி இந்தியா வெற்றி வாகை சூடியது. இந்த வெற்றியை நினைவு கூறும் விதமாக அன்றிலிருந்து இந்தியாவிலும், வங்கதேசத்திலும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16ம் தேதியன்று யுத்த வெற்றி விழா மற்றும் வங்கதேச விடுதலையின் பொன்விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், வங்கதேசத்திற்கு 3 நாள் பயணம் மேற்கொண்டார் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அப்போது அந்நாட்டின் தலைநகரான டாக்காவில் நடைபெற்ற விடுதலை பொன்விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், வங்கதேச முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுப் பார்வையிட்டார். அவருடன் சேர்ந்து வங்கதேச அதிபர் அப்துல் ஹமீத்தும் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

Advertisement:
SHARE

Related posts

ரயில் முன் தவறி விழுந்த தாய், மகன் உயிர் தப்பிய வைரல் வீடியோ!

Arivazhagan CM

எம்.எல்.ஏ.வானால் ஊதியத்தை இப்படி செலவிடுவேன்: கொங்கு ஈஸ்வரன்!

Jeba Arul Robinson

ரஜினியின் ’அண்ணாத்த’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு

Ezhilarasan