முக்கியச் செய்திகள் இந்தியா

அம்பேத்கர் நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மலர்தூவி மரியாதை

அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அவர் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சட்டமேதை அம்பேத்கரின் 65-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisement:
SHARE

Related posts

’சகோதரனா நினைச்சேன், இப்படி பண்ணிட்டான்..’ நடிகை பரபரப்பு புகார்

Halley Karthik

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, ரூ. 1,500 : சரியா? தவறா?

Jeba Arul Robinson

20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும்: தொழில்நுட்ப வல்லுநர் குழு

Saravana Kumar